சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

‘மஞ்சள் நிற டர்பனும், துப்பட்டாவும் அணிந்து வாருங்கள்’: பகவந்த் மான்

பதவியேற்பு விழாவுக்கு மஞ்சள் நிற டர்பனும், துப்பட்டாவும் அணிந்து வாருங்கள் என பஞ்சாப் முதல்வராக பதவியேற்கவுள்ள பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

News image

பகவந்த் மான்

Updated On :14 மார்ச் 2022, 6:36 am

DIN

பதவியேற்பு விழாவுக்கு மஞ்சள் நிற டர்பனும், துப்பட்டாவும் அணிந்து வாருங்கள் என பஞ்சாப் முதல்வராக பதவியேற்கவுள்ள பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் பகவந்த் மான் முதலமைச்சராக நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார்.

பதவியேற்பு விழாவானது ராஜ்பவனுக்கு பதிலாக பகத்சிங் ஊரான கட்டர் காலனில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பகவந்த் மான் இன்று வெளியிட்ட செய்தியில்,

“மார்ச் 16ஆம் தேதி அனைத்து மக்களும் கட்டர் காலனுக்கு வருமாறு வேண்டுகிறேன். நிகழ்விற்கு வரும் சகோதரர்கள் மஞ்சள் நிற டர்பனும், சகோதரிகள் மஞ்சள் நிற துப்பட்டாவும் அணிந்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன். பகத்சிங் ஊரான கட்டர் காலனை மஞ்சள் நிறமாக மாற்றுவோம் என்றார்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.