குஜராத்: 12-14 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்

குஜராத் மாநிலத்தில் 12-14 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அம்மாநில முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். 
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

குஜராத் மாநிலத்தில் 12-14 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அம்மாநில முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். 

மாநிலத் தலைநகர் காந்திநகரில் உள்ள போரிஜ் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்தார்.

தொடங்கிவைத்து, படேல் பள்ளியில் உள்ள சில மாணவர்களுடன் உரையாடினார். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாணவர்களை ஊக்குவித்தார். தடுப்பூசி இயக்கத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களின் பணியைப் பாராட்டினார்.

மேலும் 12-14 வயதுடையவர்கள் 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 

மாநிலத்தில் கிட்டத்தட்ட 2,000 மையங்களில் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்கின்றனர். மொத்தம் 22.63 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com