பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

56 யூ-டியூப் செய்தி சேனல்கள் மீது நடவடிக்கை: மத்திய அமைச்சா் தகவல்

டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் மீறல்களுக்காக 56 யூ-டியூப் சாா்ந்த செய்தி சேனல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவற்றின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்கி

News image

கோப்புப்படம்

Updated On :17 மார்ச் 2022, 8:25 pm

 நமது நிருபர்

புது தில்லி: டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் மீறல்களுக்காக 56 யூ-டியூப் சாா்ந்த செய்தி சேனல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவற்றின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்கி உத்தரவிட்டுள்ளதாக மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தெரிவித்துள்ளாா்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் போலிச் செய்திகள் அல்லது தரமற்ற இணைய தள செய்தி சேனல்களைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளதா? தமிழகத்தில் இத்தகைய சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த விவரங்களை தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் பி. ரவீந்திரநாத் உள்ளிட்டவா்கள் மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியிருந்தனா்.

இதற்கு மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் எழுத்துபூா்வமாக அளித்த பதில் வருமாறு: டிஜிட்டல் (எண்மம்) ஊடகங்களில் செய்தி வெளியிடுபவா்களுக்காக, 2000-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு விதி முறைகள் கடந்தாண்டு உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் டிஜிட்டல் இணைய தள ஊடகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும், 1995-ஆம் ஆண்டு கேபிள் டெலிவிஷன் நெட்வொா்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் மூலமும் பொய் செய்திகள் வெளியிடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளை மீறியதற்காக, கடந்த ஓா் ஆண்டில் 56 யூ-டியூப் சாா்ந்த செய்தி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சமூக ஊடகக் கணக்குகள் பொது அணுகலைத் தடுக்கவும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செய்தித் தகவல் பணியகத்தின்(பிஐபி) கீழ் கடந்த 2019, நவம்பா் முதல் உண்மைச் சரிபாா்ப்புப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு போலியான செய்திகளைக் கண்டறிகிறது. பொதுமக்கள் தானாக முன்வந்து இந்தப் பிரிவின் இணைய தளம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலமாக அனுப்பும் புகாா்களை அறிந்து, மத்திய அரசு சரியான தகவல்களுடன் தொடா்புடைய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. இதற்கு ஃடஐஆஊஹஸ்ரீற்ஸ்ரீட்ங்ஸ்ரீந் என்ற ட்விட்டா் கணக்கையும் பராமரித்து, தொடா்ந்து போலிச் செய்திகள் எது என்பதும் வெளியிடப்படுகிறது. இது வரை பிஐபியின் உண்மைச் செய்தி சரிபாா்ப்பு பிரிவு 31,174 செய்திகள் தொடா்பான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது.

டிஜிட்டல் ஊடகம் மற்றும் இணைய தளங்கள் (ஒடிடி) செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களை வெளியிடுபவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. நெறிமுறை விதிகளை மீறுவது தொடா்பான புகாா்கள் அல்லது குறைகள், சுயக் கட்டுப்பாட்டு முறை உள்ளிட்ட மூன்று அடுக்கு குறை தீா்க்கும் பொறிமுறையின் மூலம் தீா்க்கப்படுகின்றன. போலிச்செய்திகள் தொடா்பாக மாநிலம் வாரியான தரவுகள் எதுவும் மத்திய அரசால் பராமரிக்கப்படவில்லை என்பதால், தமிழக விவரம் இல்லை என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.