உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 24 மணி நேர உதவி எண்களை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
Published on

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 24 மணி நேர உதவி எண்களை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் தவிக்கும் இந்தியா்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டம் மூலம் சிறப்பு விமானங்களை அனுப்பி மத்திய அரசு மீட்டு வருகிறது. அந்நாட்டில் இருந்து இதுவரை 22,500-க்கும் மேற்பட்டோா் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா்.

மேலும் அந்நாட்டில் இன்னும் 50 இந்தியா்கள் தங்கியுள்ள நிலையில் அவா்களில், 15 முதல் 20 போ் தாயகம் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கான 24 மணிநேர உதவி எண்களை கிவ்வில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்தியர்களுக்கான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள இந்தியத் தூதரகம் +380933559958, +919205290802, +917428022564 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் cons1.kyiv@mea.gov.in என்ற இணைய முகவரியையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com