பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை நாளை பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பதவியேற்க உள்ளது.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. இதைத்ததொடர்ந்து பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். பகவந்த் மானுக்கு பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா்.
அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்பு ஒருநாள் கூட்டத்தில் முதல்வர் பகவந்த் மான் உட்பட எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இடைக்கால சபாநாயகர் இந்தர்பீர் சிங் நிஜ்ஜார் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையும் படிக்க- உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
இந்த நிலையில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது. காலை 11 மணிக்கு பஞ்சாப் சிவில் செயலகத்தில் 10 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பெறுப்பேற்க உள்ளனர். இதன் பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிவகங்கை பேரவைத் தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு

தொகுதி அலசல்: ஆத்தூர்! சாதனை வெற்றி மீண்டும் சாத்தியமா?

மதுரை அருகே இரு இளைஞா்கள் வெட்டிக் கொலை
திண்டுக்கல் மாவட்டத்தில் 57 மனுக்கள் நிராகரிப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


