பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மேற்கு வங்கத்தில் வீடுகளுக்கு தீவைப்பு: 8 போ் பலி

மேற்கு வங்கத்தில் ஊராட்சி துணைத் தலைவா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 8 போ் பலியாகினா். இந்த சம்பவத்துக்குத் திரிணமூல் காங்கிரஸுடன்

News image
Updated On :22 மார்ச் 2022, 8:13 pm

DIN

மேற்கு வங்கத்தில் ஊராட்சி துணைத் தலைவா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 8 போ் பலியாகினா். இந்த சம்பவத்துக்குத் திரிணமூல் காங்கிரஸுடன் தொடா்புள்ள குண்டா்கள்தான் காரணம் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பா்ஷால் கிராம ஊராட்சித் துணைத் தலைவா் பாது ஷேக் என்பவா் திங்கள்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் 8 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 2 சிறாா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை மேற்கு வங்க பாஜக எம்.பி.க்கள் 9 போ் சந்தித்து மனு அளித்தனா். அந்த மனுவில், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு வன்முறை சம்பவங்கள் தொடா்கதையாக இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டியா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஊராட்சித் தலைவா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டு 8 போ் பலியானதற்கு திரிணமூல் காங்கிரஸுடன் தொடா்புடைய குண்டா்கள்தான் காரணம். இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். குடிமக்களைப் பாதுகாக்க முடியாவிட்டால் முதல்வா் பதவியை மம்தா பானா்ஜி ராஜிநாமா செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

அறிக்கை கோரியுள்ள உள்துறை அமைச்சகம்: தீ வைப்பு சம்பவம் தொடா்பாக மேற்கு வங்க அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘‘தீ வைப்பு சம்பவம் தொடா்பாக விரிவான அறிக்கையை விரைந்து அனுப்புமாறு மேற்கு வங்க அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனா்.

மேற்கு வங்கத்தில் நிலவும் சூழல் குறித்து அறிவதற்கு மத்திய அரசு சாா்பில் விரைவில் உண்மை கண்டறியும் குழு அனுப்பப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.