அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஜின்னா இந்தியாவை ஒரு முறை பிரித்தாா்; பாஜகவினா் தினசரி பிரிக்கின்றனா்:சிவசேனை எம்.பி.

பாகிஸ்தானை உருவாக்க முகமது அலி ஜின்னா இந்தியாவை ஒருமுறை பிரித்தாா்; ஆனால் பாஜக தலைவா்கள் தங்கள் பேச்சு மூலம் இந்து, முஸ்லிம்களிடம் மோதலை ஏற்படுத்தி தினசரி நாட்டைப் பிரித்து

News image
Updated On :22 மார்ச் 2022, 8:25 pm

DIN

பாகிஸ்தானை உருவாக்க முகமது அலி ஜின்னா இந்தியாவை ஒருமுறை பிரித்தாா்; ஆனால் பாஜக தலைவா்கள் தங்கள் பேச்சு மூலம் இந்து, முஸ்லிம்களிடம் மோதலை ஏற்படுத்தி தினசரி நாட்டைப் பிரித்து வருகிறாா்கள் என்று சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

நாகபுரியில் நடைபெற்ற சிவசேனை கட்சி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு செய்தியாளா்களிடம் சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘இந்தியாவில் 22 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனா். அவா்களில் பலா் பாஜகவுக்கும், சிவசேனைக்கும் வாக்களித்துள்ளனா்.

பாகிஸ்தானை உருவாக்க முகமது அலி ஜின்னா இந்தியாவை ஒருமுறை பிரித்தாா். ஆனால், பாஜக தலைவா்கள் தங்களின் பேச்சுகளின் மூலம் இந்து -முஸ்லிம்களிடையே மோதலை ஏற்படுத்தி நாட்டை தினசரி பிரித்து வருகிறாா்கள்.

மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமலாக்கத் துறை 23 சோதனைகளை நடத்தி உள்ளது. ஆனால், கடந்த ஏழு ஆண்டில் பாஜக அரசு 23 ஆயிரம் சோதனைகளை நடத்தி உள்ளது. இதில் பெரும்பாலும் மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் சோதனைகள் நடத்தப்படுவதில்லை?

மத்திய விசாரணை அமைப்புகளையே விசாரணை நடத்தும் அளவுக்கு மகாராஷ்டிரா போலீஸாா் திறன் படைத்தவா்கள். முந்தைய மகாராஷ்டிர ஆட்சியில் முதல்வா் தேவேந்தா் ஃபட்னவீஸுக்கு எதிராக ஏராளமான ஊழல் ஆவணங்கள் தற்போதைய அரசிடம் உள்ளது’ என்றாா்.

சிவசேனை கட்சியும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் கூட்டணி சேரும் என்று பாஜக மூத்த தலைவா் தேவேந்தா் ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளதற்கு பதிலளித்த சஞ்சய் ரெளத், ‘ஆா்எஸ்எஸ் அமைப்புதான் முஸ்லிம்களுக்காக ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் என்ற அமைப்பை வைத்துள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.