உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், இந்தியாவில் மட்டுமே 15 சதவிகித பெண் விமானிகள் இருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, உலகின் மற்ற நாடுகளில் உள்ள விமானிகளில் 5 சதவிகிதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். ஆனால் இந்தியாவில் 15 சதவிகிதம் பெண் விமானிகள் உள்ளனர்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக விமானத் துறையில் உள்ள முன்னுதாரணம் இது. கடந்த 20 - 25 ஆண்டுகளில் விமானத் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பெரிய நகரங்களில் விமான நிலையங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது அந்த நகரங்களில் நிலை பொருளாதார ரீதியாக உயர்ந்துள்ளது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் விமான போக்குவரத்துத் துறை முக்கிய பங்காற்றும் துறையாக மாறியுள்ளது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.