கரோனா விதிமீறல்: ரூ.350 கோடி அபராதம் வசூலித்த கேரள அரசு

கரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலித்ததன் மூலம் கேரள அரசு ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. 
கரோனா விதிமீறல்: ரூ.350 கோடி அபராதம் வசூலித்த கேரள அரசு

கரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலித்ததன் மூலம் கேரள அரசு ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதிலிருந்து மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, மாநில அரசின் புள்ளிவிவரங்களின்படி, 

3.30 கோடி மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர். 

முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது. இதுமட்டும் 42.74 லட்சத்துக்கும் அதிகமான மக்களிடமிருந்து ரூ.214 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

மீதமுள்ள தொகை சரியான காரணமின்றி வெளியில் சுற்றித் திரிந்தவர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com