புது தில்லி: தில்லியின் பங்கோல்புரி பகுதியில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த பையில் இருந்த இளைஞர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மங்கோல்புரி காவல்நிலையத்துக்கு இன்று காலை 7 மணிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு காவலர்கள் விரைந்துச் சென்றனர்.
இதையும் படிக்க.. பெண் செய்தியாளர் எழுதிய 3 உருக்கமான தற்கொலை கடிதங்கள்
அங்கு, ஒரு பெரிய பையில், அடையாளம் தெரியாத இளைஞரின் உடல் கிடந்தது. அந்த இளைஞருக்கு 20 முதல் 22 வயது இருக்கலாம். கழுத்தை அறுத்து கொலை செய்து இந்த பையில் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
உடனடியாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்படுகிறது. அருகில் உள்ள காவல்நிலையங்களில் இளைஞர் காணவில்லை என்று புகார் வந்திருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


