
மும்பை: நாட்டில் கரோனா பேரிடர் தொடங்கிய நாள் முதல், தாராவில் கடந்த வியாழக்கிழமை முதல்முறையாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் மக்கள் நெரிசல் மிகுந்து காணப்பட்டதால், அங்கு கரோனா பரவல் கடுமையாக இருந்த நிலையில், நேற்று புதிதாக கரோனா பாதிப்பும், பலியும் கூட இல்லாத நாளாக அமைந்தது.
மும்பை மாநகராட்சி வெளியிட்ட புள்ளி விவரத்தில், தாராவியில் மட்டும் இதுவரை 8,233 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 419 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க.. பெண் செய்தியாளர் எழுதிய 3 உருக்கமான தற்கொலை கடிதங்கள்
தாராவியில் கரோனா நோயாளிகள் இல்லாத நிலையில், தாதர் மற்றும் மாஹமில் தலா ஒரு கரோனா நோயாளி இருக்கிறார்கள்.
இன்று முற்றிலும் பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம் நாளாக அமைந்துவிட்டது. அப்பகுதி சுகாதார அதிகாரிகளும், உள்ளூர் மக்களும் எடுத்த கடுமையான நடவடிக்கையால்தான் இது நிகழ்ந்துள்ளது. இங்கு கரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதை செய்துமுடித்துள்ளோம். மறுபக்கம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியிருக்கிறோம் என்கிறார் நகராட்சி ஆணையர் கிரண்.
மிகக் குறுகிய பகுதியில் சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு 5,000 சிறு தொழில்கள், தொழிற்சாலைகள், குடிசைத் தொழில்கள் நடக்கின்றன. அங்கு 2020 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 2020ஆம் ஆண்டில் தாராவிதான் கரோனா பரவலில் மிக முக்கிய அபாயப் பகுதியாக இருந்தது. தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.