பஞ்சாபில் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பகவந்த் மான் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக முதல்முறையாக பொறுப்பேற்றுள்ள பகவந்த மான் கடந்த இரண்டு வாரங்களில் லஞ்ச ஒழிப்பு உதவி எண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.
இதையும் படிக்க | பொது வேலை நிறுத்தம்: தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை
இந்நிலையில், இன்று காலை பகவந்த் மான் வெளியிட்ட செய்தியில்,
“பஞ்சாப் மக்களின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருள்களை வழங்க ஆம் ஆத்மி அரசு முடிவெடுத்துள்ளது. மக்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உரிய நேரத்தில் பொருள்களை அலுவலர்கள் வழங்கவுள்ளனர். இந்த திட்டத்தை மக்கள் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.