பொது வேலை நிறுத்தம்: தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை

தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் காரணமாக 67% பேருந்துகள் இயங்கவிலை என்று போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் காரணமாக 67% பேருந்துகள் இயங்கவிலை என்று போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் காலை நிலவரப்படி 10 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாரிமுனை, அண்ணாநகர், வடபழனி, தியாகராய நகர், பெரம்பூரில் 90 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் போதிய அளவு இயக்கப்படாததால் பயணிகள் காத்திருக்கின்றனர். மேலும் கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, வேலூர், திருவள்ளூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திலிருந்து ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நாகர்கோவிலில் இருந்து கேளத்துக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஒருசில பேருந்துகள் மட்டும் தமிழக எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. கன்னாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 760 பேருந்துகளில் 250 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரித்த நிலையிலும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com