பெட்ரோல் விலை உயர்வை விவாதிக்க கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், மாா்ச் 28-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாா்ச் 30-ஆம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன், விலை உயர்வு மற்றும் பொது வேலைநிறுத்தம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை முன்வைத்தனர். இதற்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.