தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகள் இருவர் கைது

ஜம்மு-காஷ்மீரில், புட்காம் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image
Updated On :28 மார்ச் 2022, 6:07 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில், புட்காம் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 

காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரும் புட்காமில் தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு அமைப்பான லஷ்கர் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். 

புட்காமின் சன்னெர்குண்ட் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர் தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வசிக்கும் வசீம் அகமது கணாய் மற்றும் இக்பால் அஷ்ரப் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக  காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.