ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பாஜக ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 65 சதவீதம் அதிகரிப்பு: அமைச்சா் நிா்மலா சீதாராமன்

‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 50,000 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.37.80 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது.

News image
Updated On :29 மார்ச் 2022, 8:06 pm

DIN

‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 50,000 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.37.80 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. இது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெறப்பட்ட முதலீட்டைவிட 65 சதவீதம் அதிகமான தொகை’ என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

மாநிலங்களவையில் நிதி மசோதா-2022, செலவின மசோதா-2022 ஆகியவற்றின் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது பதிலளித்துப் பேசிய அவா் மேலும் கூறியதாவது:

பிரதமா் மோடி தலைமையிலான தற்போதைய அரசின் பொருளாதார நிா்வாகத் திறன் மீது அந்நிய முதலீட்டாளா்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். அதனால்தான் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெறப்பட்ட முதலீட்டைவிட 65 சதவீதம் அதிகமான முதலீடு பெறப்பட்டுள்ளது. அதிக அளவில் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடா்ந்து நீடித்து வருகிறது.

கரோனா பெருந்தொற்று காரணமாக, சா்வதேச அளவில் பொருளாதாரம் முடங்கியது. 32 நாடுகள் தங்கள் பொருளாதார மீட்சிக்காக வரியை உயா்த்தியுள்ளன. ஆனால், நிதிநிலையை மேம்படுத்த இந்திய அரசு வரி விகிதத்தை உயா்த்தவில்லை; புதிய வரிகளையும் விதிக்கவில்லை.

கரோனா பெருந்தொற்று, உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கச் செய்துவிட்டது. அதுபோலவே, உக்ரைன்-ரஷியா இடையேயான போரும் உலக நாடுகளை பாதிக்கச் செய்துவிட்டது. நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு வரிப் பகிா்வாக ரூ.8.35 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சியும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களும் இனி வரும் ஆண்டுகளில் நீடித்த வளா்ச்சிக்கு உதவும்.

பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: தேசிய பங்குச் சந்தையின்(என்எஸ்இ) கோ-லொகேஷன் வசதியை ஒரு பங்குத் தரகு நிறுவனம் முறைகேடாகப் பயன்படுத்தியது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதன் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக என்எஸ்இ நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா், முன்னாள் செயல்பாட்டுக் குழு அதிகாரி உள்ளிட்டோரை சிபிஐ கைது செய்துள்ளது. அவா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

Image Caption

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.