குடும்பத்திற்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசம்: கோவா அரசு

குடும்பத்திற்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசம்: கோவா அரசு

ஒரு குடும்பத்திற்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
Published on

ஒரு குடும்பத்திற்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதல்வராக பாஜகவின் பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டதையடுத்து நேற்று(மார்ச்-29) நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

அதன்படி, வருகிற நிதியாண்டிலிருந்து இந்தத் திட்டம் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 20 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com