ஏப்ரல் மாத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.67 லட்சம் கோடி 

இந்தியாவில் முதல்முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.5 லட்சம் கோடி ரூபையைத் தாண்டியுள்ளது. 
ஏப்ரல் மாத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.67 லட்சம் கோடி 

இந்தியாவில் முதல்முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.5 லட்சம் கோடி ரூபையைத் தாண்டியுள்ளது. 

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் 1,67,540 கோடி ரூபாய். இதில் மத்திய ஜிஎஸ்டி வரியாக 33,159 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி வரியாக 41,793 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி 81,939 கோடி ரூபாயும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் 36,705 கோடி ரூபாயும், செஸ் வரியாக 10,649 கோடி ரூபாய் அடங்கும்.

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் முன்னெப்போதையும் விட அதிகமாகும். இது கடந்த மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி தொகையான 1,42,095 ரூபாயை விட 25,000 கோடி ரூபாய் அதிகம். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு 33,423 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டிக்கு 26,962 கோடி ரூபாயும் மத்திய அரசு விடுவித்துள்ளது.

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட 20% அதிகமாகும். இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 30% அதிகரித்துள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த வருவாயை விட 17% அதிகமாகும்

முதல் முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.5 லட்சம் கோடி ரூபையைத் தாண்டியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com