
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று காலை திடீரென கனமழை பெய்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தெலங்கானா மாநிலத்திலும் மிகக் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது.
ஹைதராபாத்தில் வெப்பம் மிக அதிகமாக இருந்த நிலையில், இன்று காலை திடீரென கனமழை கொட்டியது. பலத்த காற்று மற்றும் மின்னலுடன் பெய்த மழையால் ஹைதராபாத்தில் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுதுள்ளது.
கலபதார் மற்றும் யாகுட்புரா ஆகிய மாவட்டங்களிலும் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. பலத்த காற்றும் வீசியதால், மரங்களும் சில இடங்களில் வேரோடு சாய்ந்ததுள்ளது. இதனால், சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.