கொல்கத்தாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அமித்ஷா
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்காளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.


இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்காளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
கொல்கத்தாவில் இருந்து, வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியில் உள்ள ஹிங்கல்கஞ்சை அடைந்து, எல்லைப் பாதுகாப்புப் படையின் ஆறு நவீன எல்லைப் புறக்காவல் நிலையங்களை அவர் திறந்து வைக்கிறார்.
பின்னர், ஹரிதாஸ்பூரில் அமைந்துள்ள மைத்ரி சங்க்ரஹாலயாவின் (அருங்காட்சியகம்) அடிக்கல் நாட்டி, பிரஹரி சம்மேளனத்தில் கலந்து கொள்கிறார்.
அங்கிருந்து வடக்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிலிகுரிக்கு சென்று ரயில்வே இன்ஸ்டிடியூட் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இன்று மாலை டார்ஜிலிங்கில் பல்வேறு அரசியல் பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சர் சந்திப்பு நடத்தவும் வாய்ப்பு உள்ளது.
மே 6ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் டீன் பிகாவுக்குச் செல்கிறார், மேலும் பிஓபி ஜிகாபரியில் காலை 9.30 மணிக்கு கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள பிஎஸ்எஃப் வீரர்களுடன் கலந்துரையாடுகிறார், பிற்பகலில் அவர் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாநில அலுவலகப் பணியாளர்களை சந்திக்கிறார்.
பிஜேபி தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, ஷா மாலை 6 மணிக்கு முக்தி-மாத்ரிகா என்ற கலாசார நிகழ்வில் கலந்துகொள்கிறார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஷாவின் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...