உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: மத்திய அரசு

கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி:  கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, கௌஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜம்ஷெட் பர்ஜோர் பர்திவாலா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மத்திய அரசு அவர்களை நியமித்ததுள்ளது. கொலிஜியம் தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையில் உள்ளது.

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் அறிவிப்பில், குடியரசுத் தலைவர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி சுதன்ஷு துலியாவை மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜம்ஷெட் பர்ஜோர் பர்டிவாலாவை இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைவதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது


உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com