மதுரா கோயில்-மசூதி வழக்கு: சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? தீர்ப்பின் தேதி வெளியீடு

கடந்த 1669-70 காலக்கட்டத்தில், முகலாய பேரரசு ஒளரங்கசீப் உத்தரவின் பேரில் கத்ரா கேசவ் தேவ் கோயில் வளாகத்தின் 13.37 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட மசூதியை அகற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் கிருஷ்ண ஜென்ம பூமியில் கட்டப்பட்ட ஷாஹி இத்கா மசூதி தொடர்பான வழக்கில் வரும் மே 19ஆம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்து மதுரா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கில், மூன்று மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கத்ரா கேசவ் தேவ் கோயிலில் குழந்தை வடிவத்தில் கிருஷ்ணர் உள்ளார். இவரின் நண்பர் எனக் கூறி லக்னெளவை சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி உள்பட ஏழு பேர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இவர்களே வழக்கின் முதல் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்து ராணுவம் என்ற அமைப்பின் தலைவராக உள்ள மணிஷ் யாதவ், இரண்டாவது மனுதாரராகவும் மேலும் ஐந்து பேர் மூன்றாவது மனுதாரர்களாகவும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூன்றாவது மனுதாரர்கள் சார்பில் மகேந்திர பிரதாப் சிங் என்ற வழக்கறிஞர் ஆஜராகியுள்ளார்.

இவர்கள் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 1669-70 காலக்கட்டத்தில், முகலாய பேரரசு ஒளரங்கசீப் உத்தரவின் பேரில் கத்ரா கேசவ் தேவ் கோயில் வளாகத்தின் 13.37 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட மசூதியை அகற்ற வேண்டும்.  இது, பகவான் கிருஷ்ணர் பிறந்த இடம் அருகே அமைந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கு குறித்து பேசிய மாவட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், "இரு தரப்பு வாதங்களும் வியாழக்கிழமை நிறைவடைந்தன. ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை மே 19ஆம் தேதிக்கு செஷன்ஸ் நீதிபதி ராஜீவ் பாரதி ஒத்திவைத்துள்ளார்.

கடவுள் கிருஷ்ணரின் நண்பர் எனக் கூறி கொண்டு, ரஞ்சனா அக்னிஹோத்ரி உள்பட ஏழு பேர், கடந்தாண்டு செப்டம்பர் 25ஆம் தேதி, மூத்த நீதிபதி அமர்வில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான 13.37 ஏக்கர் நிலத்தில் உள்ள ஷாஹி இத்கா மசூதியை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை விடுத்திருந்தனர்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com