தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சிலிண்டர் விலை உயர்வு குறித்து கவலைப்பட வேண்டாம்: சொல்வது?

சமையல் எரிவாயு உருளை மற்றும் பால் விலை உயர்வு குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தின் மனைவி சுலட்சனா சாவந்த் பதிலளித்துள்ளார்.

News image
சிலிண்டர் விலை உயர்வு குறித்து கவலைப்பட வேண்டாம்: சொல்வது?
Updated On :7 மே 2022, 12:41 pm

IANS

பனாஜி: சமையல் எரிவாயு உருளை மற்றும் பால் விலை உயர்வு குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தின் மனைவி சுலட்சனா சாவந்த் பதிலளித்துள்ளார்.

சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தனது கணவரும் கோவா முதல்வருமான பிரமோத் சாவந்த் வழக்கமாக அளிக்கும் பதிலான கவலைப்பட ஒன்றுமில்லை என்ற வாக்கியத்தை பதிலாக அளித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், விலைவாசி உயர்வை மக்கள் சற்று பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். உயர்ந்துவரும் பணவீக்கத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த மாநிலத்தில் மட்டும் எரிவாயு உருளை விலை உயர்த்தப்படவில்லை. ஒட்டுமொத்த நாட்டுக்கும் விலை உயர்வானது பொருந்தும். நாம் இதைப் பற்றி கவலைப்படக் கூடாது. சிறிது நாள்கள் இதனை நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இதிலிருந்து தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டார் சுலட்சனா சாவந்த்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.