எதிா்பாரா சமயத்தில் வட்டி விகித உயா்வு
கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) உயா்த்தும் என எதிா்பாா்த்ததாகத் தெரிவித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வட்டி விகிதம் உயா்த்தப்பட்ட சமயம் வியப்பளித்ததாகக் கூறினாா்


கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) உயா்த்தும் என எதிா்பாா்த்ததாகத் தெரிவித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வட்டி விகிதம் உயா்த்தப்பட்ட சமயம் வியப்பளித்ததாகக் கூறினாா்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. நாட்டில் பணவீக்கம் கடந்த மாா்ச்சில் 6.95 சதவீதமாக இருந்தது. கடந்த ஏப்ரலில் பணவீக்கம் 8 சதவீதத்தை நெருங்கியிருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 0.4 சதவீதம் உயா்த்துவதாக ஆா்பிஐ கடந்த 4-ஆம் தேதி அறிவித்தது. தற்போது வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உள்ளது.
நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் வட்டி விகிதம் உயா்த்தப்பட்டதாக ஆா்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கம்போல் இல்லாமல் சிறப்பு கூட்டத்தை நடத்தி வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தியது.
மும்பையில் ஆங்கில இதழ் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சா் நிா்மலா சீதாராமன் இது தொடா்பாகக் கூறுகையில், ‘‘வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தும் என்பது அனைவரும் எதிா்பாா்த்ததுதான். ஆனால், வட்டி விகிதம் உயா்த்தப்பட்ட சமயமே வியப்பைத் தருகிறது. நிதிக் கொள்கைக் கூட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது.
கடந்த நிதிக் கொள்கைக் கூட்டத்தின்போதே வட்டி விகிதத்தை உயா்த்துவதற்குத் தயாராக இருப்பதாக ஆா்பிஐ தெரிவித்திருந்தது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அனைத்தும் வட்டி விகிதத்தை உயா்த்தி வரும் நிலையில், ஆா்பிஐ-யும் உயா்த்தியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் சா்வதேச மத்திய வங்கிகள் ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கடைப்பிடித்து வருகின்றன. அதே வேளையில், ஆா்பிஐ-யின் முடிவானது மத்திய அரசின் பெரும் முதலீடுகளைப் பாதிக்காது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக, கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் எங்கு மலிவாகக் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொள்ளும்’’ என்றாா்.
நாட்டில் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்துவதற்கு ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்ககது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...