தெலங்கானா பிரிவு தலைவர் சஞ்சய் குமாரின் இரண்டாம் கட்ட பாத யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நாளை கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு, நாளை நகரில் உள்ள ராமந்தபூரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்குச் செல்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள துக்குகுடாவில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர், தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சஞ்சய் குமாரின் பாதயாத்திரையின் ஒரு பகுதியாக மே 5 அன்று மகபூப்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அதே நேரத்தில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் பிற மூத்த தலைவர்களும் பாத யாத்திரையில் பங்கேற்றனர்.
மாநிலத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு மாற்றாக பாஜக உருவெடுக்கும் உறுதியான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் ஷாவின் பொதுக்கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
சஞ்சய் குமார் தனது இரண்டாம் கட்ட பாத யாத்திரையை 'பிரஜா சங்க்ராம யாத்ரா' ஏப்ரல் 14 அன்று கோவில் நகரமான அலம்பூரிலிருந்து தொடங்கினார்.
கடந்த ஆண்டு முதல் கட்ட பாதயாத்திரையை அவர் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்களின் கேப்டன் ஸ்ரேயாஷ்..! இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி!

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


