ஜம்மு-காஷ்மீர் காவலர் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று காலை மாவட்டத்தில் உள்ள குடோராவில் கான்ஸ்டபிள் ரியாஸ் அகமது தோகர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
காயமடைந்த காவலர் நகரத்தில் உள்ள ராணுவத்தின் 92 மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் பயங்கரவாதிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர் ஒருவர், புத்காம் மாவட்டத்தில் உள்ள சதூராவில் உள்ள அவரது அலுவலகத்திற்குள் வியாழக்கிழமை பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...