மேகாலயா: பிக்பாக்கெட் அடித்த பெண்ணை கம்பத்தில் கட்டிவைத்த கொடூரம்!
மேகாலயத்தில் ஜோவாய் நகரில் பெண் ஒருவர் பிக்பாக்கெட் அடித்ததாகக் கூறி மார்க்கெட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கம்பத்தில் கட்டி வைத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


மேகாலயத்தில் ஜோவாய் நகரில் பெண் ஒருவர் பிக்பாக்கெட் அடித்ததாகக் கூறி மார்க்கெட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கம்பத்தில் கட்டி வைத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் பெண் ஒருவர் மார்க்கெட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டது போன்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஜெயந்தியா மலை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் பிக்ரம் டி மரக் கூறியதாவது, ” இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமை முதலே ஜோவாய் மாவட்டத்தின் மகளிர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அவரது விசாரணையை தொடங்கி விட்டார். அந்த விசாரணையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...