பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் விற்பனை தொடக்கம்

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்பனை தேசிய பங்குச் சந்தையில் இன்று தொடங்கியிருக்கிறது.
பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் விற்பனை தொடக்கம்
பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் விற்பனை தொடக்கம்

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்பனை தேசிய பங்குச் சந்தையில் இன்று தொடங்கியிருக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்டுள்ளது. எல்ஐசி பங்குகளை ஐபிஓ முறையில் வாங்கியவர்கள், இனி தேசிய பங்குச் சந்தையில் விற்பனை செய்யலாம்.

ஐஓபி விற்பனையின்போது ஒரு எல்ஐசி பங்கின் விலை ரூ.949 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாள் பங்குச் சந்தை வர்த்தகத்தில், இன்று ரூ.872 என விலை குறைந்து விற்பனையாகிறது.

எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு, மே 4-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெற்றது. எதிா்பாா்த்ததைக் காட்டிலும் எல்ஐசியின் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளா்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்தது. விற்பனைக்கு வந்த பங்குகளின் எண்ணிக்கையை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக பங்குகள் வேண்டி முதலீட்டாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் குவிந்தன.

பங்குகளை வாங்க போட்டி அதிகமானதால் முதலீட்டாளா்களுக்கு கோரியதைவிட குறைவாகவே பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிகள் மே 12-ஆம் தேதி முடிவடைந்ததையடுத்து எல்ஐசியின் பங்குகள் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை பட்டியலுக்கு வந்துள்ளது.

எல்ஐசியின் 3.5 சதவீத பங்குகளை அதிகபட்ச விலையான ரூ.949-க்கு விற்பனை செய்த வகையில் மத்திய அரசு ரூ.20,557 கோடியை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com