
புது தில்லி: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது, சென்னை ஐஐடி தலைமையிலான 8 நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட 5ஜி டெஸ்ட் பெட் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தில் பங்கேற்ற மற்ற நிறுவனங்கள் ஐஐடி தில்லி, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர், ஐஐஎஸ்சி பெங்களூர், சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச் (SAMEER) மற்றும் சென்டர் ஆப் எக்செலன்ஸ் இன் வயர்லெஸ் டெக்னாலஜி (CEWiT) ஆகியவை அடங்கும்.
220 கோடிக்கும் அதிகமான செலவில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. டெஸ்ட் பெட் இந்திய தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை செயல்படுத்தும். இது அவர்களின் தயாரிப்புகள், முன்மாதிரிகள், தீர்வுகள் மற்றும் 5G மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்க உதவும்.
TRAI 1997 இல் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997 மூலம் நிறுவப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.