இஸ்லாமாபாத்: இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், தெஹ்ரிக்-இ-தலிபானை (டிடிபி) சேர்ந்த பயங்கரவாதிகள் 30 பேரை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், உயர்மட்ட தெங்ஹரிக்-இ-தலிபான் கைதிகள் யாரும் விடுவிக்கப்படவில்லை என்றும், 30 பயங்கரவாதிகளின் விடுதலை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகிறது.
ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் மற்றும் ஆதாரங்களின்படி,
முன்னாள் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் தலைமையிலான பாகிஸ்தான் தூதுக்குழு காபூலுக்குச் சென்று தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீப மாதங்களில் பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள பின்னணியில் தடை செய்யப்பட்ட டிடிபி உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பாகிஸ்தானின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தாண்டு மட்டும், அதிகாரிகள் உள்பட 120க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள், பெரும்பாலும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் 15 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சியை இழக்கும் மமதா?
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai

5 மாநில பேரவைத் தேர்தல்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - முழு விவரம்!
பெங்களூரில் கடும் மழை! 7 பேர் பலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


