
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் வீடு உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
லாலு பிரசாத் மற்றும் அவரது மகளின் வீடு மற்றும் குடும்பத்தினருக்குச் சொந்தமான தில்லி, பிகாரில் உள்ள 17 இடங்களில் சிபிஐ போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ரயில்வே டெண்டர் வேலைவாய்ப்பில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கில் சோதனை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக லாலு பிரசாத், பிகாா் முதல்வராகப் பதவி வகித்த காலத்தில், கால்நடைத் தீவனங்களைக் கொள்முதல் செய்வதாகக் கூறி, பல்வேறு கருவூலங்களில் போலி ரசீதுகளை சமா்ப்பித்து மோசடி செய்த 5 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.