நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகாராஷ்டிரம்: பல்லார்பூரில் உள்ள மரக்கிடங்கில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் பல்லார்பூர் பகுதியில் உள்ள காகித ஆலையின் மரக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :23 மே 2022, 7:46 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் பல்லார்பூர் பகுதியில் உள்ள காகித ஆலையின் மரக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 25 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

சந்திராபூரில் உள்ள காகித ஆலையின் பல்லார்பூர் மரக் கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பல்லார்பூர் தாசில்தார் சஞ்சய் ரெய்ஞ்ச்வார் கூறினார்.

மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.