
உத்தரப் பிரதேசத்தில் பெற்ற தாயை மகன் அடித்தேக் கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆஷா தேவின் மகன் ஷானி (22). இவருக்கும் அவரது தாய்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆத்திரமடைந்த ஷானி தனது தாயை மரத் தடியால் பயங்கரமாகத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து அவரின் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ஷானியின் தந்தை, தனது மகன் மனநிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினரிடம் கூறினார்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.