
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 30ஆம் தேதி வரை தடை விதித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தியது. இதன்பிறகு, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ளார்.
தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, விசா மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரத்தின் மீது நேற்று புதிதாக வழக்குப்பதிவு செய்திருந்தது.
இதையும் படிக்க | மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்; கடைகள் மூட உத்தரவு
இந்நிலையில், அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிக்க கோரி தில்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் அளித்த மனுவை விசாரித்த நீதிபதி, மே 30 வரை கைது செய்ய தடை விதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.