ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

டிவி நடிகை கொலையில் தொடர்புடைய இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீர் ஐ.ஜி. தகவல்

தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் கொலையில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார். 

News image
காஷ்மீர் ஐஜி விஜய் குமார்
Updated On :27 மே 2022, 3:16 am

DIN

தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் கொலையில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது: 

காஷ்மீரின் அவந்திபோராவில் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கியும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும்  ஷாகிர் அகமது வாசா மற்றும் அஃப்ரீன் அஃப்தாப் மாலிக் என அடையாளம் தெரியவந்துள்ளது. அம்ரீன் பட் கொலையாளிகள் 24 மணி நேரத்தில் கொல்லப்பட்டுள்ளனர். 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த மூன்று நாட்களில் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள், லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 7 பேர் என 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.