
கொல்கத்தா: ஆன்லைன் மூலமே தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இன்று ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி சாலையில் உள்ள பல்கலைக்கழகத்தின் வாயிலில் கூடிய 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆறு மாதங்கள் நடத்தப்பட வேண்டிய பாடத்தை இரண்டு மாதத்தில் நடத்தி முடிக்க முடியாது என்றும், எனவே கல்லூரியில் நடத்தும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.
இரண்டு மாதத்தில் ஒட்டுமொத்த பாடத்தையும் நடத்திவிட்டு, அது முழுமையையும் தேர்வெழுத வேண்டும் என்றால் கடினம் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றதைப் போல புத்தகம் வைத்து எழுத அனுமதிக்கலாம் என்றும் வலியுறுத்தினர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுபோன்ற இரண்டு போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.