எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத கூட்டாளி கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் தீவிரவாத கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

News image
Security guard of PDP leader shot at in Srinagar
Updated On :28 மே 2022, 6:35 am

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் தீவிரவாத கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லாவில் உள்ள ஆத்தூரா பாலா பாலத்தில் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய ஒரு நபரின் நடமாட்டம் இருந்ததாக காவல் அதிகாரி கூறினார். போலீசாரை கண்டதும் அவர் தப்பிக்க முயன்றார். 

பின்னர், காவல்துறையினர் சாதுரியமாக அவரைப் பிடித்தனர். அவர் தீவிரவாத கூட்டாளி ஷ்ரக்வாரா க்ரீரியில் வசிக்கும் முகமது சலீம் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பின்னர், அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, ஐந்து பிஸ்டல் ரவுண்டுகள் உள்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. 

முதற்கட்ட விசாரணையில், க்ரீரி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தில் இந்த சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அவர் வைத்திருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.