கேரளா: கேரத்தில் ஓரிரு நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தென்மேற்குப் பருவமழை கேரளத்தை மையமாகக் கொண்டு தொடங்கும். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பருவமழைக் காலம் தொடங்குகிறது. சென்ற ஆண்டு ஜூன் 3-ல் துவங்கியது. இந்தாண்டு ஓரிரு நாள்களுக்கு முன்பே தொடங்குகிறது.
கேரளத்தைத் தொடா்ந்து கடலோர கா்நாடகம், மும்பை, கொங்கண் பிரதேச கடற்கரைப் பகுதிகள், தலைநகா் புது தில்லி, கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்களில் படிப்படியாகக் தென்மேற்குப் பருவமழை பொழியும்.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் தென்மேற்குப் பருவமழையால் பயனடைகின்றன. இந்தப் பருவமழை குறைந்தால் நாட்டில் விவசாயமும் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் இந்தக் கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருவமழை தொடங்குவது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது.
இதையும் படிக்க: மூன்று வேளையும் மேகி நூடுல்ஸ்: விவாகரத்து கோரும் கணவர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.