நாட்டில் குரங்கு அம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை: மத்திய அரசு

நாட்டில் குரங்கு அம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை  தொடர்ந்து பின்பற்றி வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


புதுதில்லி: நாட்டில் குரங்கு அம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை  தொடர்ந்து பின்பற்றி வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

மிகவும் அபூா்வமாக ஏற்படக்கூடிய குரங்கு அம்மை நோய், 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமாா் 200 பேருக்கு தொற்றியுள்ளது. அந்த நோய்த்தொற்று வேகமாகப் பரவும் வகையில் தன்னை உருமாற்றம் செய்ததாகத் தெரியவில்லை. மனிதா்களின் பழக்கவழக்க மாற்றங்களால் இது பல நாடுகளுக்குப் பரவியிருக்கலாம்.

ஆனால், இது மெதுவாக சமூகப் பரவலாக மாறக் கூடிய அபாயம் நோய். இதை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசியும், முறையான சிகிச்சை மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. 

இந்நிலையில், இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், குரங்கு அம்மை நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும், வெளிநாடுகள் மற்றும் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை பரிசோதனைக்கு உள்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னர் மனிதர்களுக்கும் பரவத் தொடங்கியது. 1970 ஆம் ஆண்டு மனிதர்களுக்கு குரங்கு அம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

மனிதர்களிடையே பரவிய சின்னம்மை, பெரியம்மை நோய் போன்று குரங்குகளிடம் இருந்து பரவிய அம்மை நோய் மனிதர்களிடையே பரவுவதையே குரங்கு அம்மை நோய் என அழைக்கப்படுகின்றன. 

மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் பரவக்கூடிய இந்த நோய், தற்போது, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் பரவுவதன் காரணம் குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com