மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த விரைவில் சட்டம்: மத்திய அமைச்சா்

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சா் பிரகலாத் சிங் படேல் தெரிவித்தாா்.
Published on

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சா் பிரகலாத் சிங் படேல் தெரிவித்தாா்.

ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவா், ‘மத்திய அரசு உறுதியான பல சட்டங்களை இயற்றி வரும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது தொடா்பாகவும் விரைவில் சட்டம் கொண்டு வரப்படும். கவலைப்பட வேண்டாம்.

ஜல் ஜீவன் திட்டங்களை காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கா் மாநிலம் வெறும் 23 சதவீதத்தை மட்டும் நிறைவேற்றி உள்ளது. பிற மாநிலங்கள் இதில் 50 சதவீதத்தை எட்டி உள்ளன.

சத்தீஸ்கரில் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லாதபோதும், அதை மேலாண்மை செய்வதில் மாநில அரசு தோல்வியடைந்துள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழைகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com