வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தேசிய தொழில்நுட்ப ஜவுளியில் 20 உத்திசார்ந்த திட்டங்களுக்கு அனுமதி

மத்திய அரசின் முன்னுரிமைத் திட்டமான தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்ககத்தின்கீழ் சிறப்பு இழைகள், விவசாய ஜவுளி, ஸ்மார்ட் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட 20 உத்திசார்ந்த ஆய்வு திட்டங்களுக்கு

News image
Updated On :2 நவம்பர் 2022, 10:04 pm

 நமது நிருபர்

மத்திய அரசின் முன்னுரிமைத் திட்டமான தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்ககத்தின்கீழ் சிறப்பு இழைகள், விவசாய ஜவுளி, ஸ்மார்ட் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட 20 உத்திசார்ந்த ஆய்வு திட்டங்களுக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அனுமதியளித்துள்ளார்.
 இந்த ஆய்வு திட்டங்களுக்கு ரூ.74 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் புதன்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான உத்திக்கான திட்டத்தோடு "ஆத்மநிர்பர் பாரத்' என்கிற சுயசார்பு இந்தியா திசைக்கான படி எனவும் ஜவுளித்துறை அமைச்சக குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
 ஜவுளித் துறையில் பயன்பாட்டுக்குரிய பகுதிகளில் தயார்படுத்துவதற்கான உத்திகளில் பாதுகாப்பு உடைகள் (2) விளையாட்டு ஆடை ஜவுளி (1), சிறப்பு இழைகள்(5), விவசாய ஜவுளி(6), ஸ்மார்ட் டெக்ஸ்டைல்ஸ் என்கிற எண்ம ஆடைகள் (2), ஆக்டிவ் வேர் ஜவுளி (1), புவியியல் சார்ந்த ஜவுளி (2), உத்தி பயன்பாட்டு பகுதி (1) உள்ளிட்ட 20 ஆய்வு திட்டங்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
 இதை முன்னிட்டு புதன்கிழமை மத்திய ஜவுளி வர்த்தகம் மற்றும் தொழில்துறை, உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பல்வேறு துறை அமைச்சகங்களின் அதிகாரிகள், ஆகியோருடன் இணைந்து தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான தனது கருத்துகளை விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
 அப்போது பியூஷ் கோயல் பேசியதாவது:
 இந்தியாவில் தொழில்நுட்ப ஜவுளிகளின் பயன்பாட்டுத் துறைகளில் ஆய்வு மற்றும் மேம்பாட்டின் வளர்ச்சிக்கு தொழில் மற்றும் கல்வித்துறை இணைப்புகள் அவசியம். கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களிடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவது காலத்தின் தேவை.
 மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த தொழில்நுட்ப ஜவுளித்துறையின் எதிர்கால வளர்ச்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் இணைந்து தங்கள் பங்களிப்பை அளிப்பது அவசியம்.
 இந்தியாவில் சிறப்பு இழைகளின் முக்கிய பயன்பாடு இருந்தபோதிலும், தொழில்நுட்பத்தின் உள்நாட்டுமயமாக்கல் இன்னும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. உலகளாவிய நிலப்பரப்பில் நிலைத்த தன்மையுடன் வலுவாக கால்பதிக்க தொழில்நுட்ப ஜவுளித் துறைக்கான இயந்திரங்கள், உபகரணங்களின் வலுவான உள்நாட்டுமயமாக்கல் அவசியம். இதற்கு தொழில்துறை, கல்வித்துறை ஆகிய இரண்டின் கூட்டுத் தலையீடுகள் தேவை என பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.
 இந்த நிகழ்ச்சியில் ஐஐடிகள், அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனம், தொழிலதிபர்கள், முன்னணி இந்திய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.