
முதல்வர் அசோக் கெலாட் மத்திய அரசைத் தாக்குவதற்குப் பதில் தனது கட்சிப் பிரச்னையை முதலில் ஒழுங்குபடுத்தவும் என்று ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோர் சாடியுள்ளார்.
ராஜஸ்தானில் தலைமை மாற்ற விவகாரத்தில் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது மௌனத்தைக் கலைத்து, ஒழுக்காற்று நோட்டீஸ் வழங்கப்பட்ட மூன்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை கோரியதை அடுத்து ரத்தோர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ரத்தோர் தனது சுட்டுரை பதிவில்,
காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூச்சலுக்குப் பிறகு சச்சின் பைலட் தனது மௌனத்தை உடைத்துள்ளார். இந்த மௌனம் காங்கிரஸ் கட்சியில் கெலாட் முகாமின் ஏ அணி மற்றும் பி அணி, பைலட் முகாமை எங்கு கொண்டு செல்லும் என்பதைக் காலம் பதில் சொல்லும். ஒருவரையொருவர் தீர்த்துக்கட்டுவதில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு மீது தினமும் கட்டுப்பாடற்ற கருத்துகளைக் கூறி வரும் முதல்வர் அசோக் கெலாட், தனது கட்சிப் பிரச்னையை கவனித்தால் நல்லது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.