
மோர்பி: குஜராத் மாநிலத்தின் மோா்பியில் நிகழந்த பால விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டுவிட்டதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோா்பியில் உள்ள மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 135 போ் உயிரிழந்தனா். 100 பேர் காயமடைந்தனர்.
இதையும் படிக்க.. பாகிஸ்தானில் அச்சு அசல் ரஜினிகாந்த் போல ஒருவர்.. அவருக்கு ஒரு ஆசை!
நேற்று அனைவரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை காணவில்லை என்று தகவல் கிடைத்தது. எனினும் தேடும் பணி தொடங்குவதற்குள், அது தவறான தகவல் என்று தெரிய வந்தது. இதையடுத்து, பலியான அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதன்கிழமை மாநில அளவிலான துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. தேசியக் கொடி அரைக் கம்பங்களில் பறக்க விடப்பட்டது. அனைத்து அரசுசாா் நிகழ்ச்சிகளும் கேளிக்கை நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.