தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பாகிஸ்தானில் அச்சு அசல் ரஜினிகாந்த் போல ஒருவர்.. அவருக்கு ஒரு ஆசை!

பாகிஸ்தானில் தாசில்தாரராக பணியாற்றி ஓய்வுபெற்ற ரெஹ்மத் கஷ்கோரியை பார்க்கும் இந்தியர்கள் யார் ஒருவரும் ஒரு நிமிடம் திகைத்துத்தான் போவார்கள்.

Published On :


பாகிஸ்தானில் தாசில்தாரராக பணியாற்றி ஓய்வுபெற்ற ரெஹ்மத் கஷ்கோரியை பார்க்கும் இந்தியர்கள் யார் ஒருவரும் ஒரு நிமிடம் திகைத்துத்தான் போவார்கள்.

காரணம் அவர் நமது திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல அச்சு அசலாக இருப்பதுதான்.

நடிகர் ரஜினிகாந்தின் ஸ்டைல் மற்றும் அவரது பேச்சுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது 70 வயதை நெருங்கினாலும் அவர் திரையுலகில் பிஸியான நடிகராகவே உள்ளார். தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்தும் வருகிறார். இந்த திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. இப்படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனத்தின் கீழ் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். எனவே அவர் 2023 முழுவதும் பிஸியாகவே இருப்பார். 

இப்போது, ரஜினிகாந்த் பற்றியல்ல செய்தி.. அவரைப் போலவே பாகிஸ்தானில் இருக்கும் ஓய்வுபெற்ற தாசில்தாரரைப் பற்றித்தான் . பாகிஸ்தானில் இருக்கும் இந்த ரெஹ்மத் கஷ்கோரி, ரஜினிகாந்த் போல இருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது புகைப்படங்களும் விடியோக்களும் பகிரப்பட்டு வருகின்றன.

இது பற்றி தெரிந்து கொண்ட ரெஹ்மத்தும், ரஜினிகாந்த் செய்யும் ஸ்டைல்களை செய்து அசத்தி வருகிறாராம்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகங்கள் பலவும் ரெஹ்மத்தை பேட்டி எடுத்து வெளியிட்டு வருகின்றன. அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் ரஜினிகாந்த் போல இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். எனக்கு ஒரே ஒரு ஆசைதான், அவரை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்று கூறியிருக்கிறாராம்.

விடியோ நன்றி: அராப் நியூஸ்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.