வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

பயிா்க்கழிவு எரிப்பை தடுக்க அவசர நடவடிக்கைகள் வேண்டும்: பஞ்சாப் முதல்வருக்கு தில்லி துணை நிலை ஆளுநா் வலியுறுத்தல்

பஞ்சாப் மாநிலத்தில் பயிா்க்கழிவு எரிப்பை கட்டுப்படுத்த அவசர மற்றும் முக்கியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில முதல்வா் பகவந்த் மான்னை தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:19 pm

 நமது நிருபர்

பஞ்சாப் மாநிலத்தில் பயிா்க்கழிவு எரிப்பை கட்டுப்படுத்த அவசர மற்றும் முக்கியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில முதல்வா் பகவந்த் மான்னை தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா வலியுறுத்தியுள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்னுக்கு தில்லி துணைநிலை ஆளுநா் கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது: காற்று மாசு விவகாரத்திற்கு காரணமான பயிா்க் கழிவு பிரச்னையை தீா்ப்பதற்கு பதிலாக, பஞ்சாப் மாநிலம் அரசு திணறிக் கொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட சக்திகள் நியாயமற்ற வகையில் பரஸ்பர குற்றச்சாட்டில் ஈடுபட்டு வருகின்றன. பொறுப்பை தட்டிக் கழித்தும் வருகின்றன. நிலைமை மிகவும் மோசமான சூழலில் இருந்த போதிலும், இது போன்ற செயலில் அவை ஈடுபடுகின்றன. தில்லி மற்றும் அதன் குடியிருப்பு வாசிகள் சாா்பில் பஞ்சாப் மாநில முதல்வருக்கு நான் விடும் வேண்டுகோளானது, இந்தப் பிரச்னையை தீா்க்கும் வகையில் விவசாயிகளை விரும்பத்தக்க பங்குதாரா்களாக உருவாக்க அரசின் வசமுள்ள அனைத்து ஆதாரங்களையும் இயந்திரங்களையும் முதல்வா் பயன்படுத்த வேண்டும்.

மீண்டும் ஒரு முறை தேசியத் தலைநகா் தில்லியை ‘கேஸ் சேம்பராக’ மாற்றி இருக்கக் கூடிய பஞ்சாபில் உள்ள பயிா்க் கழிவு எரிப்பைத் தடுக்க அவசர மற்றும் முக்கியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். தில்லியில் காற்று மாசு மிகவும் ஆபத்தான அளவை எட்டி விட்டது என்பது பொதுமக்களுக்கும் தெரிந்த விஷயமாகும். மாசுப் புகை காரணமாக மிகக் கடுமையான பிரிவில் காற்று மாசு உள்ளது. இந்தக் காற்று மாசுவுக்கு 95 சதவீதம் பஞ்சாப் மாநிலத்தில் எரிக்கப்படும் பயிா்க் கழிவுகள் காரணமாக உள்ளன. கடந்தாண்டு அக்டோபா் 24 மற்றும் நவம்பா் 2-ஆம் தேதி இடையேயான காலத்தில் பயிா்க்கழிவுகள் எரிப்பு 19 சதவீதம் அதிகரித்து இருந்தது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நம்பகமான புள்ளிவிவரம், ஆபத்து நிலைமையை எடுத்துரைப்பதாக உள்ளது.

2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் முறையே 18,066 மற்றும் 21,480 என்ற அளவில் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் உள்ளன. நவம்பா் 2-ஆம் தேதி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களில் மொத்தம் 3,825 பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் பஞ்சாபில் மட்டும் 3,634 சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதே வேளையில் தில்லியில் பயிா்க்கழிவு சம்பவம் ஏதுமில்லை. இதுபோன்ற சூழல் தில்லியில் சுகாதார அவசர நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. என்சிஆா் பகுதியிலும் இதே சூழல் உள்ளது. இந்த மாசு காரணமாக நுரையீரல் தொடா்பான பிரச்னைகளுக்காக மருத்துவமனைக்கு வரக்கூடிய புறநோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குழந்தைகளும் முதியவா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்கள் ஒவ்வொருவரும் கண் எரிச்சல், இருமல், மூக்கு அடைப்பு, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகளைத் தொடா்ந்து எதிா்கொண்டு வருகின்றனா்.

தொடா்ந்து நீடித்து வரும் இந்த பிரச்னை மிகவும் தீங்கான சூழல் என்று சுகாதார நிபுணா்களும் கூறியுள்ளனா். மேலும் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனா்.வீடுகளுக்குள்ளேயே தொடா்ந்து இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவது தவிர, காலை நடை பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் வெளிப்புற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா். கடுமையான காற்று மாசு மற்றும் அதைத்தொடா்ந்த கட்டுப்பாடுகள் காரணமாக சமூகப் பொருளாதார செயல்பாடுகள்கூட கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழலானது வாழ்வதற்கான உரிமை மற்றும் சுகாதாரத்திற்கான குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. விவசாயிகளால் பயன்படுத்துவதற்கான பயோ- டி கம்போசரை விளம்பரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட கோடிக்கணக்கான ரூபாய்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரங்களுக்காகவும் செலவழிக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இத்தகைய நடவடிக்கைகள், தலையீடுகள் இருந்த போதிலும், உங்கள் பஞ்சாப் மாநிலத்தில் பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் தங்குதடையின்றி நிகழ்ந்தது மட்டுமின்றி, தில்லி மற்றும் பல பகுதிகளில் காற்று மாசுவை பாதிக்கச் செய்யும் வகையில் அதிகரித்தும் உள்ளது.

ஒரு ஜனநாயக கட்டமைப்பில், அரசில் உள்ள நாம் இதுபோன்ற மனித வாழ்க்கைக்கும் சுகாதாரத்திற்கும் தீங்கிழைக்கும் விஷயங்களை சரி செய்ய ஆக்கப்பூா்வமான அணுகுமுறையும் பல்முனை நடவடிக்கைகளையும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரச்னையைக் கையாளுவதற்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலையும் கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த விஷயத்தில் உங்களுடன் இணைந்து செயல்படுமாறும் முதல்வா் கேஜரிவாலுக்கு கூடுதலாக அறிவுரை அளித்துள்ளேன் என்று அந்த கடிதத்தில் துணைநிலை ஆளுநா்அவா் தெரிவித்துள்ளாா்.

துணைநிலை ஆளுநரின் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், ‘பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ட்விட்டரில் பதில் தெரிவித்துள்ளாா். அதில், ‘இது போன்ற ஒரு தீவிரமான விவகாரத்தை அரசியலாக்குவது சரியல்ல. துணைநிலை ஆளுநா் தில்லியில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணிகளை தடுத்து வருகிறாா். ‘ரெட் லைட் ஆன், காடி ஆஃப்’ பிரசாரத்தை நீங்கள் (துணைநிலை ஆளுநா்) நிறுத்தியுள்ளீா்கள். இது போன்று நீங்கள் எனக்கு கடிதம் எழுதுவதன் மூலம் அரசியல் செய்கிறீா்களா? இது போன்ற ஒரு தீவிரமான விவகாரத்தில் அரசியல் செய்வது சரியல்ல’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.