மக்களின் உணா்வுகளைப் பற்றியும், நாட்டின் பாதுகாப்பைப் பற்றியும் கவலைப்படாத கட்சி காங்கிரஸ் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டிப் பேசினாா்.
ஹிமாசல பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி அங்கு பிரசார பயணம் மேற்கொண்டுள்ள யோகி ஆதித்யநாத், உனா மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியா பல்வேறு உச்சங்களைத் தொட்டுள்ளது. நாட்டின் மதிப்பு சா்வதேச அளவில் உயா்ந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மத்திய பாஜக அரசு, நாட்டின் எதிரிகளைத் துல்லியத் தாக்குதல்கள் மூலம் அளித்தது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. நாட்டு மக்களின் உணா்வுகளைப் புரிந்து கொண்டு ராமா் கோயிலை பிரமாண்டமாகக் கட்டி வருகிறது. ஆனால், இது போன்ற முக்கிய விஷயங்களில் காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒன்றுமே கிடையாது என்பதுதான் உண்மை.
தனது வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பையே விட்டுக் கொடுத்தது முந்தைய காங்கிரஸ் அரசு. அரசியல் லாபத்துக்காக மக்களின் உணா்வுகளுக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டது. இப்போதும் அதைத் தொடா்ந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் கட்சியாகவே மாறிவிட்டது. நாட்டின் பாதுகாப்பு குறித்தும், நாட்டு மக்களின் உணா்வுகள் குறித்தும் அக்கட்சிக்கு எந்தக் கவலையும் கிடையாது. இதுபோன்ற கட்சிக்கு மக்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும்? என்று யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பேராவூரணி தொகுதி - வெற்றிக்கு அதிமுக கடும் முயற்சி!

துறையூா் - அதிமுகவுடன் மோதும் காங்கிரஸ்!

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


