
தலித் தலைவர் பி.தீக்கையா மரணம் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூலை 6ம் தேதி தட்சிண கட்டடத்தில் உள்ள பெல்தங்கடியில் உள்ள அரவது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தலையில் காயங்களுடன் மயக்கமடைந்துள்ளார்.
மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீக்கையா ஜூலை 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பின்னர், தனது சொந்த கிரமமான கணியூரில் அடக்கம் செய்யப்பட்டார்.
தீக்கையாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜூலை 18-ம் தேதி பெல்தங்கடி தாசில்தார் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
காவல்துறை உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று குற்றம்சாட்டிய தீக்கையாவின் குடும்பத்தினர், சிஐடி விசாரணைக்குக் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நவம்பர் 4-ம் தேதி பெல்தங்கடி காவல்துறையினர் இந்த வழக்கு விசாரணையை, சிஐடியிடம் ஒப்படைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.