கென்யா தேசிய விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள் 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தங்கள் பணியை இன்று தொடங்கியுள்ளனர்.
கென்யா ஏர்வேஸ் கரோனா தொற்று நோய்க்கு முன்னும், பின்னும் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. எனவே ஓய்வூதிய சேமிப்பில் பணம் செலுத்த முடியாது என்று தெரிவித்த நிலையில், ஏர்வேஸ் விமானிகள் கடந்த 4 நாள்களாக பணியைப் புறக்கணித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம் செய்யும் விமானிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிறுவனம் அச்சுறுத்தியது மற்றும் காலியிடங்களை விளம்பரப்படுத்தியது.
வேலைநிறுத்த போராட்டத்தால் விமான நிறுவனத்துக்கு தினசரி $2.4 மில்லியன் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, செவ்வாயன்று கென்யா ஏர்வேஸ் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றதுடன், முடிந்தவரை குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்ப முடிந்த அனைத்து ஏற்பாடுகளும் செய்வோம் என்று எர்வேஸ் நிறுவனம் உறுதியளித்தது.
ஓய்வூதிய சேமிப்பு நிதி தொடர்பான சர்ச்சையைத் தீர்க்கத் தவறியதைத் தொடர்ந்து, தங்கள் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற விமானிகளை மிரட்ட வேண்டாம் என்று கென்யா ஏர்வேஸுக்கு செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கென்யா ஏர்வேஸ் விமானிகளின் வேலை நிறுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. நான்கு நாள்கள் வேலை நிறுத்தத்தால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


