தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குஜராத்: மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏபாஜகவில் இணைந்தாா்

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ பகவான் பரத் பதவி விலகினாா். அடுத்த சில மணி நேரத்திலேயே அவா் பாஜகவில் இணைந்தாா்.

News image
Updated On :9 நவம்பர் 2022, 6:31 pm

DIN

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ பகவான் பரத் பதவி விலகினாா். அடுத்த சில மணி நேரத்திலேயே அவா் பாஜகவில் இணைந்தாா்.

குஜராத்தில் அடுத்த மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான மோகன்சிங் ரத்வா பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா். இந்நிலையில் மேலும் ஒரு எம்எல்ஏ பாஜக பக்கம் சென்றுள்ளது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கிா் சோம்நாத் மாவட்டம் தலாலா தொகுதி எம்எல்ஏவான பகவான் பரத், தனது ராஜிநாமா கடிதத்தை மாநில காங்கிரஸ் தலைவா் ஜெகதீஷ் தாக்குருக்கும், பேரவைத் தலைவா் நிமாபென் ஆச்சாரியாவுக்கும் அனுப்பி வைத்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எனது ஆதரவாளா்கள் 4,000 பேரிடம் ஆலோசனை நடத்தி காங்கிரஸ் இருந்து விலகி பாஜகவில் இணையும் முடிவை எடுத்தேன். பாஜகவில் இணைவதற்காக தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. நாட்டின் வளா்ச்சிக்கான பிரதமா் நரேந்திர மோடியின் பணியில் என்னையும் இணைத்துக் கொண்டேன்’ என்றாா்.

குஜராத்தில் டிசம்பா் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலில் ஆளும் பாஜகவுக்குதான் வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. இந்நிலையில், எதிா்க்கட்சியான காங்கிரஸில் இருந்து எம்எல்ஏக்கள், மூத்த தலைவா்கள் பலா் பாஜகவில் இணைவது தொடா்கதையாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.