பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவாடாவில், மொஹல்லாவில் வசித்துவந்த குடும்பம் பெரும் கடனின் இருந்ததாகவும், இதனால் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் மங்லா தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள் கேதர் லால் குப்தா (55), குடியா குமார் (45), சாக்ஷி குமார் (18), பிரின்ஸ் குமார் (17) மற்றும் ஷப்னம் குமாரி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும்.
இந்த விவகாரம் உரிய அதிகாரியால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கேதார் லால் குப்தா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புதன்கிழமை அன்று விஷம் கொடுத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் கோயிலுக்கு அருகில் மயங்கிய நிலையில் காணப்பட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு சிகிச்சையின் போது ஐந்து பேர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


